நெற்பயிரில் சொட்டு நீர்ப் பாசன முறை

Pasumai Nayagan

    நெற்பயிரில் சொட்டு நீர்ப் பாசன முறை பயன்படுத்துவது குறித்த சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் கோவை தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் தரக்கூடிய தொழில் நுட்பத்தைக் கோவை வேளாண் பல்கலைக்கழகம் பல்வேறு பயிர்களில் செயல்படுத்தி வருகிறது. இதன் படி நெற்பயிரிலும் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு குறித்து தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்தக் கருத்தரங்கை நடத்தி வருகிறது. ‌ நீர் மற்றும் உர மேலாண்மை தொழில் நுட்பங்களை ஆய்வு செய்யவும், தொழில் நுட்பத்தில் உள்ள இடையூறு குறித்து கலந்து ஆலோசிக்கவும் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.


ஒழித்துக்கட்டப்படவேண்டிய கொடூரமாகும்

Pasumai Nayagan www.thagavalthalam.com

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைச் சார்ந்து விவசாயம் செய்ய நிர்பந்திக்கப் படுகிறோம். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு ஆகும்.

இயற்கையின் வெளிக் கட்டமைப்பில் மட்டுமல்ல உள் கட்டமைப்பிலும் நுழைந்து செய்யும் அழிவு வெளியாகும் இது.

தாவரங்களின் படைப்பாக்கத்தை மனிதன் கையாள்வது ஆபத்தான ஒன்றாகும்.

வருங்காலத்தில் அனைத்துத் தாவரங்களும் மனிதனின் அனுமதியுடன்தான் இனவிருத்தி செய்யவேண்டும் என்பது உச்சகட்ட ஆபத்தாகும்.

நாடுகளை மிரட்டவும் அடிபணியச் செய்யவும்கூட இதை ஆயுதமாகப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள்!

பயிர்கள் முளைப்பதையும் விளைவதையும் பணக்கார நாடுகளின் சோதனைக்கூடங்கள் தீர்மானிக்கும்!

போர்களில் இத்தகைய ஆய்வுக்கூடங்கள் தாக்கப்படும்!

இறுதியில் மனித இனத்தை அழித்தொழிக்கும்.

இது ஒழித்துக்கட்டப்படவேண்டிய கொடூரமாகும்!

அறிவியல் இதற்குத் துணைபோகக் கூடாது!...மாறாக இயற்கைக்குப் பாதகம் இல்லாத வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்...

ஆனால் இதற்கு அறிவியலாளர்கள் ஏன் துணை போகிறார்கள் என்பது சிந்திக்கவேண்டிய கேள்வி ஆகும்!...